இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள பிரபல வர்த்தக நிலையக் கட்டிடத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இன்றைய தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 2 நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைதானவர் கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபர் மீது இடையூறு விளைவித்தல் மற்றும் கொலைமுயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் பயணித்த மகிழுந்து வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்தபோது வர்த்தகருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியுள்ளது.

இதன்போதே குறித்த வர்த்தகர் இலங்கைக்கான ஈரான் தூதுவரைத் தாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.ஈஃனiஎ, ஈஃனiஎ,