ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலகின் பிரபல வர்த்தகர் எலான் மஸ்க்(Elon Musk) இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு இந்தோனேசியாவிற்கு சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் செயற்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.