Header image alt text

20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா(முல்லை), வசந்த்(யாழ்), மாதவன்(தலைவர்-ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்),
சாமி(தம்பியப்பா பாஸ்கரன் -யாழ்), சைமன்(யாழ்), பிரபு(முல்லை), மரியான்(மன்னார்), பாபு(ஜெஸ்மின்- திருமலை), ரவீந்திரன்(மன்னார்), நந்தீஸ்(மன்னார்), சிறி(முசுறி -மன்னார்), சுதன்(வவுனியா), சுகுணன்(வவுனியா), யூலி(மன்னார்), பி.எல்.ஓ(வவுனியா), பேணாட்(வவுனியா), சீலன்(மன்னார்), சசி(வவுனியா), அத்தான்(யாழ்), தேவன்(கிளிநொச்சி), கமலன்(மன்னார்), மார்க்ஸ்(யாழ்), லிங்கம்(வவுனியா), வே.சுரேஸ்(யாழ்),

Read more

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ISIS தீவிரவாதிகளை குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Read more

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (25) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்புக் கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்று முதல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இன்று மீண்டும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோர் இன்று முதல் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி வரை தமது பதவிகளில் செயற்படுவதைத் தடுத்து நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. Read more

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்டவர்களும் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரானிய வௌிவிவகார அமைச்சு இன்று காலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஹுசெய்ன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்டவர்கள் அசர்பைஜான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 2 நீர்ப்பாசனத் திட்டங்களை  திறந்துவைப்பதாக நேற்று அங்கு சென்றிருந்தனர். திறப்புவிழாவில் கலந்துகொண்ட பின்னர் ஈரானின் வடமேற்கு நகராகிய Tabriz க்கு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read more

நாட்டில் மூன்று தசாப்தமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள் பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர். Read more