நாட்டில் மூன்று தசாப்தமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள் பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.

குறித்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.