Header image alt text

21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் சுகவீன விடுமுறை பெற்று கடமைகளுக்கு சமூகமளிக்காமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில அதிகாரிகள் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்ததாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் காமினி பீ.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று முதல் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளின் அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். Read more

நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகூடிய பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, கல்பிட்டி ,  வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களே வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவுகளில் 6,815 குடும்பங்களை சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நீதிமன்றில் இன்று முற்பகல் முன்னிலையாகியிருந்தார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் டயனா கமகேவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. Read more

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தோனேசியா இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்று வரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஆகியோருக்கு இடையே நேற்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்தோனேசிய ஜனாதிபதி சிநேகபூர்வமாக வரவேற்றார். Read more