Header image alt text

கிளாலி வளர்மதி முன்பள்ளியைச் சேர்ந்த சிறார்களுக்கு சிற்றுண்டி, குளிர்பானம், தண்ணீர் போத்தல் மற்றும் மதிய உணவும் இன்று (22.05.2014) வழங்கிவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மூன்றாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Read more

கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்தவரும், அமரர் தோழர் ஜெகன் அவர்களின் துணைவியாருமான மகிந்தன் பாக்கியவதி அவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக இன்று 80ஆயிரம் ரூபாய் பெறுமதியில் தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தொகை நிதியும் கட்சியின் துணைத் தலைவர் தோழர் கேசவன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. லண்டனில் வசிக்கும் தோழர் அல்வின் அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.

Read more

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே 2023ஆம் ஆண்டு 4 இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Read more

காஸா சிறுவர்கள் நிதியத்திற்கு 40 மில்லியன் ரூபா நன்கொடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (21) கையளிக்கப்பட்டுள்ளது. சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்ட பலரது நிதிப்பங்களிப்புடன் காஸா சிறுவர் நிதியத்திற்கு 40,198,902 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான காசோலையை நேற்று கையளித்தார்.

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். Read more