மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்தவரும், கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், மத்தியகுழு உறுப்பினர் தோழர் சூட்டி (நிஸ்கானந்தராஜா) அவர்களின் அன்புச் சகோதரருமான மயில்வாகனம் சொர்ணராஜா அவர்கள் இன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி, 1286 பயனாளிகள் காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 322 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. 942 மில்லியன் ரூபா செலவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத் தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.
ISIS அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வருடனும் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கொழும்பு மாளிகாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமீர் என அழைக்கப்படும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ISIS பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் விசேட குழு நிமியக்கப்பட்டுள்ளது.
யாழ். வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். யாழ். வைத்தியசாலையை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் யாழ். தீவகங்களுக்கு இடையிலான படகுச்சேவை இன்று (24) இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் கடும் காற்று வீசுவதால், யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கான படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊர்காவற்றுறை கண்ணகியம்மன் இறங்குதுறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைத்தீவுக்கான படகுச் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரதி பணிப்பாளர் T.N. சூரியராஜா தெரிவித்தார்.