Header image alt text

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் கிளிநொச்சி மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் கிளிநொச்சி நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரும், பேச்சாளருமான க. சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் நா. இரட்ணலிங்கம், பொருளாளர் க. துளசி, துணைத் தேசிய அமைப்பாளர் கு. சுரேந்திரன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் மற்றும் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…. தோழர் நடேசன் அவர்கள், கழகத்தின் மன்னார் மாவட்ட முதலாவது தளபதியாக செயற்பட்டவர். மன்னார் வவுனியா பகுதிகளில் படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.

Read more

25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதார சேவைகளுக்கான விசேட நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று  முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட மையத்தில், வடக்கில் தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சேவைகள் மேம்படுத்தப்படவுள்ளன. Read more

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்ட விரிவுரையாளர் புன்சர அமரசிங்க இதனைத் தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய பட்டியலில் 600ற்கும் மேற்பட்ட இளைஞர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. Read more

தென்மேல் பருவப்பெயர்ச்சியினால் வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் இன்று சூறாவளியாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, மறுஅறிவித்தல் வரை வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடற்றொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த இரு கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more