பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்ட விரிவுரையாளர் புன்சர அமரசிங்க இதனைத் தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய பட்டியலில் 600ற்கும் மேற்பட்ட இளைஞர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு பேரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அவர்களுக்கு கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்ட விரிவுரையாளர் புன்சர அமரசிங்க தெரிவித்தார்.

குறித்த 4 சந்தேகநபர்களும் பாகிஸ்தானின் அபு என்ற நபரின் வழிகாட்டலில்இ இந்தியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்இ கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.