கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதார சேவைகளுக்கான விசேட நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட மையத்தில், வடக்கில் தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சேவைகள் மேம்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் புதிதாக குழந்தைகளை பிரசவித்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வடமாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.