ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கும் தகைமை அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சி.வி விக்னேஸ்வரனை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள தமது இல்லத்தில் தம்மை சந்திக்க வந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல் நீதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ரணில் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வ்வாறாயினும், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும், இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.