கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வருகை முனையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் சாரதிகள் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
		    
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை ஜூன் மாதம் 27ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.
‘சர்வசன அதிகாரம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ”ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, தேசிய சுதந்திர முன்னணி சார்பில் விமல் வீரவங்ச, பிவித்துறு ஹெல உறுமய சார்பில் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் டி.வி.டி.திலகசிறி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஜீ.வீரசிங்க, யுதுகம அமைப்பின் ஏற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இணைந்து புதிய அரசியல் கூட்டணிக்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர். 
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.