Posted by plotenewseditor on 28 May 2024
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர பிரிவிற்குள் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு இருவர் நுழைந்துள்ளனர். விபத்தில் கையில் காயமேற்பட்ட ஒருவருடன் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை வைத்தியசாலைக்குள் செலுத்தியுள்ளார். இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரைத் தாக்குவது CCTV-இல் பதிவாகியிருந்தது.  Read more