அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை அரசர்கேணி வளர்பிறை முன்பள்ளிச் சிறார்களுக்கு இன்று (29.05.2024) கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என்பன வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஆறாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கட்சியின் பிரதேச அமைப்பாளர் தோழர் சின்னவன் (சிவராசா), முன்பள்ளி ஆசிரியைகள், லலிதா இராஜேஸ்வரி, ஜெயரூபி, முன்பள்ளிச் சிறார்களின் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.