
எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் செல்லத்துரை ரவீந்திரன் (தோழர் ரவி) அவர்களின் சிரேஸ்ட புதல்வன் செல்வன் ரவீந்திரன் கிரிஷாந்த் (வயது 16) அவர்கள் 29.05.2024 புதன்கிழமை இயற்கை எய்தியதையிட்டு அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, செல்வன் கிரிஷாந்த் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
		    
31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
மக்களின் அபிலாஷைகள், விருப்பங்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தலையிடுவது ஜனநாயகத்தை நசுக்கும் சர்வாதிகார முயற்சி என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் கொள்கைகளை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பதே ஜனநாயகம் என அந்த அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும் முன்மொழிவுகள் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில், சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை ஒன்றை இன்று  வெளியிட்டுள்ளது. 
கிரேக்க பிணை முறி தொடர்பான வழக்கில் இருந்து  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2012 இல் கிரேக்கத்தின் பிணை முறிகளில் முதலீடு செய்து, அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கான தெரிவு கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகரும்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். க.பொ.த உயர் தர பரீட்சை கடந்த ஜனவரி  4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் 1,73,444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.