Header image alt text

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற “ஒன்றாக வெல்வோம்” மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். Read more

பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது…!! Read more

இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 31 சீன பிரஜைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200-இற்கும் அதிக வௌிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். Read more

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட ஏழு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. Read more

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். Read more

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது X பதிவில் இதனை தெரிவித்துள்ளார். கப்ரோத் தனது விஜயத்தின் போது, ​​அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.L. ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளிவிபர அறிக்கையைத் தயாரிக்குமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். Read more