Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
20 ஆம் நூற்றாண்டின் ‘தமிழ் கலாசார இனப்படுகொலை’ என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 43ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (குமார்) (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். Read more
Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் புஷ்பராஜ் ஜெரார்ட் கொழும்பில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Posted by plotenewseditor on 1 June 2024
Posted in செய்திகள்
கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில் அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில்இ கனேடிய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் குறித்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more