க.பொ. த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவனை பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியபோது… Read more
Posted by plotenewseditor on 2 June 2024
Posted in செய்திகள்
க.பொ. த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவனை பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியபோது… Read more
Posted by plotenewseditor on 2 June 2024
Posted in செய்திகள்
அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக நுவரெலியா தலவாக்கலை வாழைமலை தோட்டத்தில் அமைந்துள்ள ஆக்ரா அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 44 பிள்ளைகளுக்கு இன்று (02.06.2024) விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஏழாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.Posted by plotenewseditor on 2 June 2024
Posted in செய்திகள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பரில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமானது. இதில் 452,979 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 387,648 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,331 தனியார் பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர்.
Posted by plotenewseditor on 2 June 2024
Posted in செய்திகள்
நாட்டின் பல பகுதிகளிலும்150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கொழும்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 June 2024
Posted in செய்திகள்
தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான காலநிலை காரணமாக நாளை முதல் பாடசாலைகளை மூடும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கனமழையுடன் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதாலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் பயண நடவடிக்கைகள் தடைபட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.