Header image alt text

அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டுக் கழகத்தினருக்கான சீருடைகள் நேற்று (04.06.2024) செவ்வாய்க்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக எட்டாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Read more

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

அவுஸ்திரேலிய கனியவள நிறுவனம் ஒன்று இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனம் எதிர்வரும் ஜூலை அல்லது ஒகஸ்ட் மாதமளவில் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இலங்கை கிளையின் பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. Read more

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே, மத்தியில் அக்கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது. இதனையடுத்து, மக்களவையைக் கலைத்து புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. இதற்கமைய, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.  இதன்பொருட்டு, பிரதமர் பதவியை நரேந்திர மோடி இராஜினாமா செய்துள்ளார். Read more

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.

Read more

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…

04.06.2024 அன்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும், நாளாந்தம் முகம் கொடுத்துவரும் நெருக்கடிகளையும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய வகையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை

Read more

18ஆவது இந்திய மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 286 ஆசனங்களையும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 202 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 55 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நேற்று(04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், இறுதித் தொகுதியின் வாக்கெண்ணிக்கை இன்று அதிகாலை 5.30 க்கு நிறைவடைந்தது. Read more