அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டுக் கழகத்தினருக்கான சீருடைகள் நேற்று (04.06.2024) செவ்வாய்க்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக எட்டாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்டக்குழு உறுப்பினருமான ஜேம்ஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுக் கழகத்தினர்களுக்கான சீருடைகளை வழங்கி வைத்தார்கள்.