Header image alt text

07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

நாட்டில் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6286 கார்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குதல் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதியென அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். கொடகமையில் இன்று இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார். எவ்வாறாயினும், தமது கட்சியில் இருந்து கொண்டு வேறு கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். Read more

கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு வாடகைத் தொகையும் அதிகரித்துள்ளதுடன்இ சராசரியாக 2,202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. Read more

தாம் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று   நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார். கலந்துரையாடலின் போது தங்களின் ​யோசனைகளை முன்வைத்ததாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பதில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார். Read more

நரேந்திர மோடி எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி 3ஆவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அதன்படி, அவர் ஜூன் 9ஆம் திகதி மாலை 6.30ற்கு ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மோடி மாத்திரம் பதவியேற்பார் என்றும்இ பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.