கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு வாடகைத் தொகையும் அதிகரித்துள்ளதுடன்இ சராசரியாக 2,202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

கனடாவின் முன்னணி வீட்டுமனை இணையத் தளங்களில் ஒன்றான சுநவெயடள.உய நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கனடாவில் சராசரி வாடகைத் தொகை முதல் தடவையாக 2,200 கனேடிய டொலர்களைக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.