எமது கட்சியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும் முல்லைத்தீவு, குமுழமுனை, தண்ணீரூற்று அரிமத்தியா ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கனடா தோழர்கள் கந்தசாமி, விஜயன், குணபாலன், லண்டன் தோழர்கள் த.சிவபாலன், வேந்தன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கேதினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கின்றது. கொழும்பிலுள்ள 2 ரயில்வே பணிமனைகளில் இருந்து ரயில்கள் இயக்கப்படவில்லையென லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்கப்படாமை, பதவி உயர்வின்மை, ஆட்சேர்ப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று காலை 10 மணி முதல் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படவுள்ளது. வீதியின் இருமருங்கிலுமுள்ள மண்மேடுகள் மற்றும் அபாய நிலையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நாளை மாலை 06 மணி வரை பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியை மூடி பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பஹல கடுன்னாவ பகுதி இன்று மாலை 06 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.