Posted by plotenewseditor on 9 June 2024
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இவ்வருடம் தேர்தல் வருடம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.