Header image alt text

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் திரு. த.சித்தார்த்தன் அவர்களின் கந்தரோடை இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லாரியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ செயற்படுவதைத் தடுத்து விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜேதாச ராஜபக்ஸ கட்சியின் உறுப்பினராக செயற்படுவதற்கும் இந்த இடைக்கால தடையுத்தரவில் உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் பணியாற்றுவதற்காக தொடர்ந்தும் இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதை இடைநிறுத்துவதற்கு அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சர்ஜி லெவ்ரோவ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இடம்பெறும் பிரிக்ஸ் அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ரஷ்யாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைய, கிராமிய வீதி மற்றும் கிராமங்களில் பாலங்கள் நிர்மாணிக்கும் பணிகளிலிருந்து தமது உறுப்பினர்கள் விலகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹேமச்சந்திர குணசிங்க தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்க முடியாதுள்ளமை மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். Read more