ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் திருப்தியடையும் பட்சத்தில், அவற்றை முன்நோக்கி கொண்டுசெல்ல முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இல்லையாயின், மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டில் மருந்து, உரம் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுடன் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் நிற்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும் இதுவரையில் அதற்கான உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு தீர்வாக பல பரிந்துரைகள் கல்வி அமைச்சின் குழுவொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ளது.