தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க  பிரித்தானியாவிற்கு இன்று அதிகாலை பயணமானார். எதிர்வரும் 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் பிரித்தானியா  பயணித்தார்.  இங்கிலாந்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்களுடன் பல மாநாடுகளில் அனுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  Read more
		    
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி காளிக்கோவில் பகுதியைச் சேர்ந்த எமது பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை அடையாளந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ,அத்துடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் உந்துருளி ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு உந்துருளிகளில் வருகை தந்த ஐவர் அடங்கிய குழு கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறுகள் காணப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். 
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 48 மாதங்களுக்கான கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று குழுவினால் நேற்றிரவு நிறைவு செய்யப்பட்டமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முன்னேற்றத்தை வௌிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.