யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி காளிக்கோவில் பகுதியைச் சேர்ந்த எமது பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை அடையாளந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ,அத்துடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் உந்துருளி ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு உந்துருளிகளில் வருகை தந்த ஐவர் அடங்கிய குழு கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மீன் தொட்டியை சேதப்படுத்தி வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் உணர்வுகளைத் தவறாக சித்தரிக்காதே’ என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீட்டினுள் வீசிய பின்னர் குறித்த குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.