இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாக பேணுவது அவசியமென IMF வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். செயற்றிட்ட இலக்குகளை அடைவதற்கான அவதானிப்புகள் மற்றும் மாற்று முன்மொழிவுகள் குறித்து அறிய தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவை சாத்தியமானவையாகவும் செயற்றிட்ட காலப்பகுதிக்குள் அடையக்கூடியவையாகவும் காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  Read more
		    
ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.  எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டார்.  
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை இன்று ஆரம்பிப்பதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று(14) காலை 06 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தபால் சேவை ஊழியர்களின் பணிப்கிஷ்கரிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருடன் நேற்று(13) கலந்துரையாடிய போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.