முதலீடுகளுக்காக சொத்துகளை வழங்கும் போது மக்களுக்கு வௌிப்படைத்தன்மையுடன் அது தொடர்பில் அறிவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் காவையன் குடியிருப்பு பகுதி மக்கள் இன்று  கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவின் காவையன் குடியிருப்பில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி எதற்காக வழங்கப்படவுள்ளது என்பதனை வௌிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பில்  ஈடுபட்டனர். Read more
		    
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இது தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத் தொகை பணத்தை அவர் மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் 20ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அரச நில அளவையாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையால், இன்று ஆறாவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. 
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் அவற்றின் ஊடாக சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தின் விபரங்கள் உள்ளிட்டவற்றின் மேலதிகத் தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.