மன்னார் வளைகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் அதிகளவானவை இந்திய மீனவர்களினால் கைவிடப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு கடல்சார் ஆய்வு நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்தக் கழிவுகளில் 50 சதவீதமானவை மீன்பிடித்துறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகளாக இருந்துள்ளன. Read more
		    
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஹட்டன் நகரில் இருந்து மல்லியப்பூ சந்தி வரையில் பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதேநேரம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தங்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.