தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான திருகோணமலையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் மரணித்து இன்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஈழத்தின் திருமலையின் தவப்புதல்வனான அமரர் கமலபாஸ்கரன் அவர்கள் 1950க்களின் முற்கூறுகளில் மேற்படிப்பிற்காக பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு மருத்துவத்துறை தொழிநுட்பவியலாளனாக விளங்கினார்.
		    
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை   இலங்கை வரவுள்ளார். நாளை காலை வருகை தரவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 
‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருந்த தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன. அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, 
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு போதுமான நிதி கையிருப்பில் இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த வருடத்தில் நாட்டின் கையிருப்பு வழமை நிலைக்கு திரும்புமாயின், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து  பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.