Header image alt text

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (20.06.2024) மாலை 5மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(புளொட்), பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(ரெலோ), தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், இ.சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

Read more

த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களின் பாராளுமன்ற உரை 19.06.2024-
நன்றி தலைவர் அவர்களே!
இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் முறைமை 2017ம் ஆண்டு மாற்றப்பட்டு தொகுதி நிர்ணய சபை அமைக்கப்பட்டு அச்சபை ஒரு தொகுதி நிர்ணய அறிக்கையை அறிக்கையிட்டிருந்தது. அவ்வறிக்கை பாராளுமன்றத்தில் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது முழுமையாக நிராகரிக்கப்பட்டது. தொகுதி நிர்ணய அறிக்கை நிராரிக்கப்பட்ட காரணத்தினால் இதுவரை தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது.

Read more

ஜெர்மனியில் வசிக்கும் தோழர் கந்தசாமி சந்திரன் அவர்களின் பிறந்தநாளை (19.06.2024) முன்னிட்டு இன்றையதினம் (20.06.2024) நாவற்காடு முள்ளியவளையில் அமைந்துள்ள குபேரன் மகளிர் அமைப்புக்கு சுழற்சி முறை கடன்திட்டத்துக்கு மூலதன நிதி வழங்கப்பட்டது. மேற்படி வைபவத்தில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான தவராசா மாஸ்ரர், கட்சியின் இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன், கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் புஸ்பராசா ஆகியோர் கலந்துகொண்டு நிதியுதவியை வழங்கி வைத்தார்கள்.

Read more

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுள்ளது. வேதன நிலுவை மற்றும் வேதன அதிகரிப்பினை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்திய உதவியில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 106 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்நிலையூடாக இந்த நிகழ்வு நடைபெற்றது. நாட்டிற்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. Read more

13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள் விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த காலங்களில் இருந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்காலத்தில் மக்களை பிளவுப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்குப் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இன்று மீண்டும் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறினார். இந்த வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.