13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள் விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த காலங்களில் இருந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்காலத்தில் மக்களை பிளவுப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்குப் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.