பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த சங்கம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 24 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார். Read more
உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை Oneline ஊடாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குள் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திறன்பேசி செயலிக்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 திகதி வரை குறித்த நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.