உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை Oneline ஊடாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குள் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திறன்பேசி செயலிக்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.