கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினூடாக, அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, ஆயிரத்து 70 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய இந்த உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. Read more
		    
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதால்இ அது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு விசேட அறிக்கை ஒன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன. 
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றுமாறு அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சரத் பொன்சேகா அண்மையில் கட்சித் தலைமையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருக்கக் கூடாது என்றும்இ அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குமாறும் கட்சித் தலைமையிடம் அமைப்பாளர்கள் கோரியுள்ளனர். 
கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, நீதியமைச்சர் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் விமர்சித்து முன்வைத்த பொறுப்பற்ற கருத்துக்கள் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுப்பதாக, இலங்கை மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை உள்ளடக்கிய இலங்கை நீதிச்சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியிலான தமது இருப்பை சவாலுக்கு உட்படுத்தும் வழக்குகளின் போது நீதிமன்றத்தின் சட்டத்திற்கமைவான தீர்ப்புகள் காரணமாக அதிருப்தி அடைந்ததால் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகவே தமது கணிப்பு காணப்படுகிறது என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தத்தில் பங்குபற்றியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு புறப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மொஸ்கோவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.