நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றுமாறு அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சரத் பொன்சேகா அண்மையில் கட்சித் தலைமையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருக்கக் கூடாது என்றும்இ அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குமாறும் கட்சித் தலைமையிடம் அமைப்பாளர்கள் கோரியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த வாரம் கூடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது, சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும்இ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்திருந்தார்.