Posted by plotenewseditor on 26 June 2024
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
சீனாவின் எக்சிம் வங்கியுடன், இலங்கை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் பீஜிங் மற்றும் கொழும்பில் இன்று மாலை நடைபெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.