ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று காலை பாடசாலைக்குச் சென்ற பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

வேதன நிலுவையை வழங்கக் கோரியும் அதிபர்இ ஆசிரியர் சேவையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள்,

அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.