ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின், பாடசாலை மாணவர்கள் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  Read more
		    
தமது போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றும் நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக்குறைவாக காணப்பட்டுள்ளது.   
சட்டமா அதிபர் பதவியிலிருந்து தாம் ஓய்வுபெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்தார். அவரது சேவைக்காலத்தை 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்ததுடன், அந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இரண்டு சந்தர்ப்பங்களில் அனுமதி மறுத்தது. சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரை மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் மீள ஆராய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நேற்று மாலை கூடியது.  
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவிற்கு பயணமாகியுள்ளார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பிற்கிணங்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவுடன் மேலும் 4 அதிகாரிகள் சீனா சென்றுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்கள் 4 நாட்கள் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளனர்.