Header image alt text

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட ஏழு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. Read more

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். Read more

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது X பதிவில் இதனை தெரிவித்துள்ளார். கப்ரோத் தனது விஜயத்தின் போது, ​​அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.L. ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளிவிபர அறிக்கையைத் தயாரிக்குமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். Read more

நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை – ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது இந்த பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். Read more