நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை – ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது இந்த பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.  Read more
		    
28.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
வெவ்வேறு கணினி குற்றச்செயல்களை புரியும் மத்திய நிலையங்கள் தொடர்பில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலும் தகவல்கள் பதிவாகி வருகின்றன. கடந்த சில நாட்களில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்த மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய வௌிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றில் சுமார் ஒரு இலட்சம் ரூபா அல்லது அதற்கு அதிகமான சம்பளம் பெற்றுத்தரப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (MIZUKOSHI Hideaki) நேற்று கைச்சாத்திட்டுள்ளார்.  
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு  மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தெமட்டகொடையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரிந்த அமில பிரியங்க அமரசிங்க எனும் இளைஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பிரத்தியேக பாதுகாவலர்களுக்கு சொந்தமான டிபென்டரை பயன்படுத்தி கடத்திச் சென்று தாக்கப்பட்டார். 
ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின், பாடசாலை மாணவர்கள் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  
தமது போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றும் நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக்குறைவாக காணப்பட்டுள்ளது.   
சட்டமா அதிபர் பதவியிலிருந்து தாம் ஓய்வுபெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்தார். அவரது சேவைக்காலத்தை 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்ததுடன், அந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இரண்டு சந்தர்ப்பங்களில் அனுமதி மறுத்தது. சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரை மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் மீள ஆராய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நேற்று மாலை கூடியது.  
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவிற்கு பயணமாகியுள்ளார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பிற்கிணங்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவுடன் மேலும் 4 அதிகாரிகள் சீனா சென்றுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்கள் 4 நாட்கள் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக அம்பாறை மாவட்டம் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கு இன்று (26.06.2024) புதன்கிழமை விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.