Header image alt text

Ex-LTTE combatants among those seeking common Tamil presidential candidate
26 June 2024 03:38 am
Kelum Bandara
Colombo, June 26 (Daily Mirror) – The party formed by ex-LTTE militants is in the political amalgam that seeks to field a common Tamil presidential candidate at the upcoming elections, Daily Mirror learns.

Read more

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று காலை பாடசாலைக்குச் சென்ற பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். Read more

அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்கள் நாளைய தினமும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று குறித்த போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். Read more

சீனாவின் எக்சிம் வங்கியுடன், இலங்கை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் பீஜிங் மற்றும் கொழும்பில் இன்று மாலை நடைபெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் பயிலுனர்கள் 3 வருடப் பயிற்சியின் பின்னர் தகுதியான ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியாகுவோர், கல்வியியல்துறை இளங்கலைமாணி பட்டம் பெற்ற ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர். Read more

யாழ்ப்பாணம் – இளவாலையைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். கடந்த 20 வருடங்களாக சட்டன் பகுதியில் வசித்துவரும் அவர்இ சட்டன் மற்றும் செம் ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவுள்ளார்.ரூ லிபரல் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே அவர் போட்டியிடுகிறார். பெற்றோரின் இழப்பிற்குப் பின்னர் கிருஷ்ணி ரிஷிகரன் தனது உறவினருடன் லண்டனுக்குச் சென்று அங்கு ஒரு சிறுவர் இல்லத்தில் வசித்து வந்தார். Read more

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இந்தப் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. Read more

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினூடாக, அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, ஆயிரத்து 70 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய இந்த உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. Read more

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதால்இ அது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு விசேட அறிக்கை ஒன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன. Read more