நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றுமாறு அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சரத் பொன்சேகா அண்மையில் கட்சித் தலைமையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருக்கக் கூடாது என்றும்இ அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குமாறும் கட்சித் தலைமையிடம் அமைப்பாளர்கள் கோரியுள்ளனர். Read more
கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, நீதியமைச்சர் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் விமர்சித்து முன்வைத்த பொறுப்பற்ற கருத்துக்கள் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுப்பதாக, இலங்கை மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை உள்ளடக்கிய இலங்கை நீதிச்சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியிலான தமது இருப்பை சவாலுக்கு உட்படுத்தும் வழக்குகளின் போது நீதிமன்றத்தின் சட்டத்திற்கமைவான தீர்ப்புகள் காரணமாக அதிருப்தி அடைந்ததால் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகவே தமது கணிப்பு காணப்படுகிறது என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தத்தில் பங்குபற்றியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு புறப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மொஸ்கோவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக அக்கரைப்பற்று, சாகாம வீதி, கோளாவில், அம்மன் சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று (23.06.2024) விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.
வேதனம் அதிகரிக்கப்படாமை, பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மூன்று நாட்களுக்கு குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் இதுவரை உரிய தீர்வினை வழங்கவில்லை என அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சகல கல்விச் செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை விட தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவருக்கு தொழில் சந்தையில் அதிக தேவை உள்ளது. ஏனெனில் அரச பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது. இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.