Header image alt text

தொலைத்தொடர்புகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புடன் இணங்கவில்லை என உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என சபாநாயகர் பாராளுமன்றுக்கு அறிவித்தார். Read more

மன்னார் வளைகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் அதிகளவானவை இந்திய மீனவர்களினால் கைவிடப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு கடல்சார் ஆய்வு நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்தக் கழிவுகளில் 50 சதவீதமானவை மீன்பிடித்துறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகளாக இருந்துள்ளன. Read more

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஹட்டன் நகரில் இருந்து மல்லியப்பூ சந்தி வரையில் பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதேநேரம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தங்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

யாழ். ஏழாலையைச் சேர்ந்த திருமதி ரங்கநாதன் புனிதவதி அவர்கள் (14.06.2024) வெள்ளிக்கிழமையன்று காலமானார். இவர் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளரும், எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அலுவலக உதவியாளரும், முன்னாள் கிராம சேவையாளரும், சிறந்த சமூக சேவையாளரும், ஆன்மீக செயற்பாட்டாளருமான செல்லத்துரை ஞானசபேசன் அவர்களின் அன்புச் சகோதரியாவார்.

Read more

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்குக் கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ‘2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு ரணில் விக்ரமசிங்க என்னிடம் கோரினார். இதற்குரிய வாய்ப்பு எனக்கே வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். Read more

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 இலங்கையர்களில் சிலரை எதிர்வரும் நாட்களில் விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார். மியன்மார் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் இதனை தெரிவித்தார். Read more

முதலீடுகளுக்காக சொத்துகளை வழங்கும் போது மக்களுக்கு வௌிப்படைத்தன்மையுடன் அது தொடர்பில் அறிவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் காவையன் குடியிருப்பு பகுதி மக்கள் இன்று  கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவின் காவையன் குடியிருப்பில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி எதற்காக வழங்கப்படவுள்ளது என்பதனை வௌிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பில்  ஈடுபட்டனர். Read more

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இது தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத் தொகை பணத்தை அவர் மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. Read more

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் 20ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.