முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு கிராமத்தில் 30.06.2024 அன்று 26 அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வுதவி எமது கட்சியின் வேண்டுகோளுக்கமைய எமது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வற்றாப்பளை வட்டார பொறுப்பாளர் டொமினிக் புஸ்பராஜா அவர்களின் அன்பளிப்பால் வழங்கப்பட்டது. நிகழ்வில் முள்ளியவளை மேற்கு வட்டார பொறுப்பாளர் சஞ்சீவன், மயூரன் மாஸ்டர், கட்சியின் உறுப்பினர்களான மோகன், ரூபன், கவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.