இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றிரவு காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர் நாடாளுமன்ற ஆசனத்தில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன்இ இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.