திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவேலையில்லாப் பட்டதாரிகள் இன்றைய தினம் இரு வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அரச துறையில் தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது திருகோணமலை உட்துறைமுக வீதியிலிருந்து ஆளுநர் அலுவலகம்வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு – காந்தி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.