புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னைநாள் பொறுப்பாளரும், லண்டன் நியூஹாம் பகுதியின் முன்னைநாள் கவுன்சிலரும் யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவருமான, தோழர் போல் சத்தியநேசன் அவர்கள் இன்று (05/07/2024) லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத் தருகின்றோம். யாழ். பரியோவான் கல்லூரியில் கல்விபயின்ற இவர், எண்பதுகளில், கழகத்தின் ஓர் அங்கமான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் ( TRRO )த்துடன் இணைந்து புலம் பெயர்ந்து சென்ற ஆயிரக்கணக்கான எமது தேசத்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உன்னதமான தோழராவார்.
		    
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரிய வருவது, அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 650 தொகுதிகளிலுள்ள 40,000க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன. 
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருமிச்சை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மனித பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து வீடுகளின் கூரை ஓடுகள் தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டதுடன் சில வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தமிழ் மக்களே பாதிப்புக்குள்ளாவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.